நேரடி தெலுங்கு படத்தை தயாரிக்கும் ஞானவேல் ராஜா
நவ 02, 2023
Advertisement
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி மற்றும் நடிகர் ஆனந்த் தேவரகொண்டா. இவர் நடித்து வெளிவந்த "பேபி" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நேரடி தெலுங்கு படத்தில் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கின்றார்.
"டூயட்" என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் மிதுன் வரதராஜ கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரித்திகா நாயக் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தலைப்பு போஸ்டர் உடன் இந்த படத்தை அறிவித்துள்ளனர். இன்று இதன் பூஜை நிகழ்வு நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!