பிளாஷ்பேக் : ஆனந்த ராகமாக மாறிய அலைகள் ஓய்வதில்லை
ஜன 27, 2025
Advertisement
பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி எழுதிய நாவல் "அலைகள் ஓய்வதில்லை". கடல்புறத்து மீனவ மக்களின் வாழ்க்கையையும், அவர்களது காதலையும் யதார்த்தமாக சொன்ன நாவல். இந்த கதையைத்தான் சிவகுமார், ராதா, அருணா, சிவச்சந்திரன், கவுண்டமணி நடிக்க "ஆனந்த ராகம்" என்ற பெயரில் படமாக இயக்கினார் பரணி. நாவலை திரைக்கதையாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்.
நாவலில் இருந்த மீனவ மக்களின் வாழ்வியலை விட்டு விட்டு காதலை மட்டும் எடுத்துக் கொண்டு அதையும் சொதப்பி உருவானது படம். கடும் விமர்சனத்தை சந்தித்த படம் பெரும் தோல்வியை தழுவியது. படத்தை ஓரளவிற்கு காப்பாற்றியதும், நிலைத்து நின்றதும் இளையராஜாதான். கடலோரம்..., கனவுகளே... மேகம் கருக்குது... ஒரு ராகம் ஆகிய பாடல்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டது.
பின்னாளில் நாவல் ஆசிரியர் தாமரை செந்தூர் பாண்டி தனது நாவலை திரைப்படமாக்கி சிதைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். அதன்பிறகு தனது நாவல்களை தானே படமாக இயக்கினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!