
பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய கள்வனின் காதலி
அதன்பிறகு "சந்திரமுகி" படத்தில் அவர் நடித்தது பெரிய கேரக்டர் இல்லை என்றாலும் ரஜினி ஜோடி என்பது அவரது பலமாக இருந்தது. பிறகு நடித்த "கஜினி" படம் அவருக்கு பெரிதாக உதவவில்லை. சாதாராண மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்தார்.
இனி இப்படியோ போனால் வேலைக்கு ஆகாது என்று நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க துணிந்தார். இதன் முதல் கட்டமாக "சிவகாசி" படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினார். அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யா நடித்த "கள்வனின் காதலி" படத்தின் மூலம்தான் முழுமையான கவர்ச்சிக்கு மாறினார். இந்த படத்தின் இயக்குனர் தமிழ்வண்ணன் என்றாலும், இது எஸ்.ஜே.சூர்யா படமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், நயன்தாராவும் ஒரே பேண்டை அணிந்து நின்ற காட்சி பெரிய பேனர்களாக வைக்கப்பட்டு படத்திற்கு பரபரப்பு கூட்டினர். பின்னர் படத்தில் நயன்தாராவும், எஸ்.ஜே.சூர்யாவும் நெருக்கமாக நடித்த காட்சிகள் பரபரப்பாகின. இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நயன்தாரா கேரியரில் முக்கியமான படமானது.
தற்போது இந்த படத்தை நவீன தொழில் நுட்பத்தில் ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!