பிளாஷ்பேக் : முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரியநாயகி
ஜூன் 08, 2024
Advertisement
சினிமாவின் ஆரம்ப காலத்தில் படத்தில் பின்னணி பாடகர், பாடகிகள் கிடையாது. நடிப்பவர்களே பாட வேண்டும். இதனால் பாடும் திறன் உள்ளவர்கள்தான் அன்று நடிகர், நடிகையாக முடியும். இப்படியான சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி ஆனார் பி.ஏ.பெரிய நாயகி.
பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை என்ற ஊரில் பிறந்தவர் பெரிய நாயகி. தாயார் ஆதிலட்சுமி, கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தார். இலங்கைக்குக் கச்சேரிகள் பாடச் சென்ற அவர், அங்கே சங்கீத ஆசிரியையாக மாறினார். இதனால் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்தது. ஆதிலட்சுமிக்கு பாலசுப்பிரமணியன், ராஜாமணி, பெரியநாயகி என மூன்று பிள்ளைகள். மூவரையுமே சங்கீதத்தில் பழக்கினார் ஆதிலட்சுமி. தாயார் மூலம் அடிப்படை சங்கீத ஞானம் பெற்றிருந்தாலும் பத்தமடை சுந்தர ஐயரிடம் ராஜாமணியும், பெரியநாயகியும் முறையாகச் சங்கீதம் பயின்றனர்.
மேடைகளில் பாடத் தொடங்கிய பெரியநாகி சினிமாவில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தார். அப்போது முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்த ஏவிஎம் செட்டியார் 1945ம் ஆண்டு "ஸ்ரீவள்ளி" படத்தை இயக்கினார். அதில் டி.ஆர் மகாலிங்கம் நாயகன், குமாரி ருக்மணி நாயகி, இருவரும் படத்தில் பாடி நடித்தனர். படத்தின் முதல் பிரதியை போட்டு பார்த்த செட்டியார் அதிர்ச்சி அடைந்தார். காரணம் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு குமாரி ருக்மணியின் குரல் அமைந்திருக்கவில்லை.
அப்போதுதான் "போஸ்ட் சிங்னரைசேஷன்" என்ற தொழில்நுட்பம் வெளிநாட்டில் அறிமுகமாகி இருந்தது. இதை வரவழைத்த செட்டியார், குமாரி ருக்மணி பாடிய அனைத்து பாடல்களையும் பெரியநாகியை பாட வைத்து அதை கச்சிதமாக பிலிமில் பொருத்தினார். பெரிய நாயகி பாடிய பாடல்களுக்கு ருக்மணியின் வாயசையும் சரியா பொருந்த பாடல்களாலேயே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படித்தான் பின்னணி பாடகி ஆனார் பெரிய நாயகி. அதன்பிறகு அந்த காலகட்டத்தில் முன்னணி பாடகியாக திகழந்தார் பெரியநாயகி. அவரின் 34வது நினைவுநாள் இன்று.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!