
அஜித்தின் அடுத்த படம் டேர் டெவில்; தயாரிப்பாளர் ஆனார் ஷாலினி
"குட் பேட் அக்லி" படத்திற்கு அடுத்து, தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என பல மாதங்களாக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில், இன்று (ஆக.,3) மாலை 5:41 மணிக்கு அஜித்தின் 64வது படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டது. அதன்படி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு "டேர் டெவில்" என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் அஜித் மனைவி ஷாலினி.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்இந்த படத்துக்கான தருணம் இது இல்ல. Fans are expecting a good movie from Ajith. GBU already reaped all benefits from fans.,, no more masala movie.