
பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன்
வி.சாந்தாராமும் இதே கதையை இரண்டு முறை படமாக்கி இருக்கிறார். தெலுங்கில் "பிரம்மரிஷி விஸ்வாமித்ரா" என்ற பெயரில் உருவான படத்தில் என்.டி.ராமராவும் தமிழில், "ராஜரிஷி" படத்தில் சிவாஜியும் விஸ்வாமித்ரராக நடித்திருக்கின்றனர்.
இவை அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். ஆனால் 1948ம் ஆண்டு தமிழில் உருவான "பிரம்மரிஷி விஸ்வாமித்ரா" வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் விஸ்வாமித்ரராக நடித்தது கே.ஆர்.ராம்சிங். மேனகையாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். ஜகன்னாத் இயக்கினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சரியான வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது படம் படு சீரியசாக இருப்பதாகவும், மக்கள் ரசிக்கும்படியான விஷயங்கள் படத்தில் இல்லை என்பதையும் கண்டுபிடித்தனர். இதனால் தியேட்டர்களுக்கு அனுப்பப்பட்ட படப் பெட்டிகளை திரும்ப கொண்டு வந்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் நடிப்பில் சில காமெடி காட்சிகளை அவசர அவசரமாக படமாக்கி அதனை படத்துடன் இணைத்து மீண்டும் தியேட்டருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு படம் வெற்றி பெற்றது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!