
பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் பாலுவின் அலப்பறைகள்
ஆக 27, 2026
Advertisement
பாடகராக இருந்த பாலசுப்ரமணியம் நடிகராகவும் வெற்றி பெற்றார். அதோடு சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். அதில் முக்கியமானது "சிகரம்". பாலு நடித்த இரண்டாவது படம். கே.பாலச்சந்தரின் உதவியாளர் அனந்து இயக்கினார். கே.பாலச்சந்தர் தயாரித்தார்.
இந்த படத்தில் பாலு ஒரு பாடகராக, இசை கலைஞராக நடித்தார். ஒரு இசை கலைஞனின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பிரச்னைகள்தான் படத்தின் கதை. இந்த படத்தில் சிறிதும், பெரிதுமாக 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் ஆண் பாடகர்களுக்கான பாடல்கள் அனைத்தின் டிராக்கையும் பாலுவே பாடிவிட்டார். பின்னர்தான் மற்ற பாடகர்களை அழைத்து பாட வைத்தார். குறிப்பாக ஜேசுதாஸ், பாலமுரளி கிரருஷ்ணா ஆகியோரை பாட வைத்தார். அவர்களே "நீங்களே அருமையாக பாடியிருக்கிறீர்கள்" என்று முதலில் பாட மறுத்தார்கள். பாலு அவர்களை வற்புறுத்தி பாட வைத்தார்.
"இதோ இதோ என் பல்லவி" என்ற பாடல், 1987ல் வெளியான "சவுபாக்கிய லட்சுமி" என்ற கன்னடத் திரைப்படத்திற்காக பாலசுப்பிரமணியம் இசையமைத்த "பிரியா பிரியா வினோதவே" என்ற பாடலை அடிப்படையாகக் கொண்டது; "முத்தம்மா என்னை" என்ற பாடல் "தி டர்ட்டில்ஸ்" குழுவினரின் "ஹேப்பி டுகெதர்" என்ற பாடலை அடிப்படையாகக் கொண்டது; "வண்ணம் கொண்ட" என்ற பாடல் 1961ல் வெளியான "ஹம் டோனோ" படத்தில் இடம்பெற்ற "கபி குத் பே" என்ற இந்திப் பாடலை தழுவி உருவானது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!