பிளாஷ்பேக் : சிவாஜி ஜோடியாக நடித்த மனோரமா
ஆக 28, 2026
Advertisement
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த ஆச்சி மனோரமா, 200 படங்களுக்கு மேல் சிவாஜியுடன் நடித்துள்ளார். "பொம்பள சிவாஜி" என்ற பெயரையும் பெற்றார். காமெடி மற்றும் குணசித்ர வேடத்தில் நடித்து வந்த மனோரமோ சிவாஜி ஜோடியாக ஒரே ஒரு படத்தில் நடித்தார் அந்தப் படம் "ஞான பறவை".
வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில், 1991ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ஹரிஷ் குமார், சசிகலா இளம் நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். ராஜசேகர், வி. கே. ராமசாமி, காந்திமதி, ராஜிவ், சின்னி ஜெயந்த், சார்லீ, கே. எஸ். ரகுராம், சுதா, ப்ரியா, சுதா, தில்லை ராஜன், குமரன், சக்தி தாமு, முத்துக்குமார், டாக்டர் ராஜேந்திரன், பிரகாசம், மாஸ்டர் சரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.ஆர். தனபாலன் தயாரிக்க, எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
ஒரே செல்ல மகளின் காதலும், தற்கொலையும் ஒரு முதிய தம்பதிகளை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. அந்த முதிய கணவன், மனைவியாக சிவாஜி, மனோரமா நடித்திருந்தார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!