பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம்
ஜூலை 26, 2025
Advertisement
பிற்காலத்தில் அம்பிகா - ராதா, ஊர்வசி - கல்பனா சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால் முதன் முதலாக 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் "சிங்காரி". 1951ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கி இருந்தார். நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இது சிக்கலான திரைக்கதையை கொண்ட காமெடி படம். மக்களின் வரவேற்பையும் பெற்றது.
"திருவிதாங்கூர் சகோதரிகள்" என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி நடனம் ஆடி வந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள், இவர்களில் பத்மினி முதலில் நடிகை ஆனார், லலிதா அதன் பிறகு அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார். ராகினி ஏராளமான படங்களில் நடித்தபோதும் தமிழில் நாயகியாக நடிக்கவில்லை.
இவர்கள் மூன்று பேரும் இணைந்து பல படங்களில் ஆடி உள்ளனர். ஆனால் இணைந்து நடித்த படம் "சிங்காரி". இதில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக பத்மினியும், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஜோடியாக லலிதாகவும், டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக ராகினியும் நடித்தார்கள். இவர்கள் தவிர டி.பாலசுப்ரமணியம், வி.கே.ராமசாமி, சி.வி.நாயகம், சி.எஸ்.பாண்டியன், "காகா" ராதாகிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, என்.ஆர்.லீலா, எம்.ஆர்.லீலா, எம். பாக்யம் ஆகியோரும் நடித்தார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!