
பிளாஷ்பேக் : உண்மையான ஆபரேஷன் காட்சி இடம் பெற்ற படம்
இந்தப் படத்தின் நாயகனான சிவகுமார் ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர். அவர் ஆபரேஷன் செய்யும் காட்சிகளை நேரடியாக படமாக்க விரும்பிய இயக்குனர் எம் பாஸ்கர், அரசின் அனுமதி பெற்று சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு உண்மையான மூளை அறுவை சிகிச்சையை அப்படியே படமாக்கினார். அந்தப் படப்பிடிப்பில் சிவகுமாரும் இருந்தார். இந்த காட்சி படத்தின் டைட்டிலின்போது இடம் பெற்றது.
கதைப்படி மூளை அறுவை சிகிச்சை நிபுணரான சிவகுமார், எப்போதும் தனது பணியிலேயே கவனமாக இருப்பார். அவரது மனைவி லட்சுமி கணவனை தெய்வமாக மதிப்பவர் என்றாலும் அவரின் அன்புக்காக ஏங்கி கிடப்பவர். அந்த வீட்டுக்கு விருந்தினராக வருகிறார் சிவச்சந்திரன். சில நாட்கள் அந்த வீட்டில் தங்கி இருக்கும் போது லட்சுமி அன்பும் அழகும் அவரை கவர்கிறது. அதன் பிறகு ஒரு நாள் இருவரும் காணாமல் போய்விடுகிறார்கள். என்ன நடந்தது ஏன் இருவரும் ஓடி போனார்கள் என்பது தான் படத்தின் கதை.
மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. சிவகுமார் மற்றும் லட்சுமி நடிப்பு பாராட்டுகளை குவித்தது. அதே நேரத்தில் கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. நடிகை மீனா, சிவகுமார் லட்சுமி தம்பதியின் மகளாக நடித்திருந்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!