பிளாஷ்பேக் : ஒரே ஹிந்திப் படத்தை காப்பி அடித்து உருவான 2 தமிழ் படங்கள்
ஆக 22, 2026
Advertisement
1962ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஹிந்திப் படம் "புரபசர்". லேக் தாண்டன் இயக்கி இந்த படத்தில் ஷம்மி கபூர், கல்பனா மோகன், லலிதா பவர் நடித்திருந்தனர். ஒரு இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு பணக்கார வீட்டிற்குள் வயதான தோற்றத்தில் செல்கிறான். அங்குள்ள முதிய பெண் அவரை காதலிக்க, அதே வீட்டில் அவன் இளமையான தோற்றத்தில் டிரைவராக பணியாற்ற, அந்த குடும்பத்தின் இளம் வாரிசு அவரை காதலிக்கிறார். இப்படியான ஆள்மாறாட்ட காமெடி கதை.
இந்த கதை 1968ம் ஆண்டு ரவிச்சந்திரன் நடிப்பில் "நாலும் தெரிந்தவன்" என்ற பெயரில் வெளியானது. இதில் காஞ்சனா, நகேஷ், அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜம்பு இயக்கி இருந்தார்.
இதே கதையை 28 வருடங்களுக்கு பிறகு பி.வாசு "நடிகன்" என்ற பெயரில் இயக்கினார். இதில் சத்யராஜ், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி நடித்திருந்தனர். மூன்று படங்களுமே வெற்றி பெற்றது. இதுதவிர இந்த கதை தெலுங்கில் "பாலே மஸ்தரு" என்ற தலைப்பில் 1969ம் ஆண்டும், பென்னிட்டி அல்லடு" என்ற பெயரில் 1991ம் ஆண்டும் வெளிவந்தது. "கோபிகிருஷ்ணா" என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் ஆனது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!