
ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்
இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கின்றனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் "மாமதுரை" என பெயரில் வருகின்ற அக்டோபர் 9ம் தேதி அன்று மதியம் 12.12 மணியளவில் வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!