மார்க் ஆண்டனி படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு
ஜூலை 13, 2023
Advertisement
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. சுனில், ரித்து வர்மா,எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கில் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. "அதிருதுடா" என முதல் பாடலுக்கு தலைப்பு வைத்துள்ளனர். இந்த பாடலை டி.ராஜேந்திரன் பாடியுள்ளார். வருகின்ற ஜூலை 15ம் தேதி மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாகிறது. இதனை கலகலப்பான வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!