
அனிருத் இசை இல்லாமல் வெளியான அரசன் படத்தின் பயர் வீடியோ
இப்படத்திற்கான சிறப்பு முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆனால், படத்தின் இசையமைப்பாளரான அனிருத் அவரது திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவர் அந்த வீடியோவிற்கு இசையமைக்க முடியவில்லை. அதனால், வீடியோ வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு திரையுலகில் பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று அனிருத் இசை இல்லாமல் நேற்று "பயர்" முன்னோட்டம் என்ற ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். சிலர் சிம்புவைக் கொல்ல பைக்குகளில் வர அவர்களை சிம்பு வெட்டி சாய்த்துவிட்டு நடந்…………..தே செல்லும் ஒரு நிமிடம் 40 வினாடிகள் இடம் பெற்ற வீடியோவாக அது இருந்தது.
இந்த "பயர்" பாடல் இசையைத் தயாரித்து கூடுதல் குரலை 808 கிருஷ்ணா கொடுக்க, அடையார் கானா ஹரி என்பவர் எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடல்தான் வீடியோவின் பின்னணியில் இடம் பெற்றுள்ளது.
வீடியோவுக்கும், பாடலுக்கும் பொருத்தமாக இல்லை, பின்னணி இசை என்றால் என்ன என்பது இப்போதுதான் புரிகிறது, வீடியோவை டெலிட் செய்துவிடுங்கள் என்ற கமெண்ட்டுகள் தான் இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் அதிகமாகப் பதிவாகி உள்ளது.
வீடியோவின் படத்தின் தரமும் மிகவும் குறைவாக உள்ளது. "அரசன்" படம் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ள ரசிகர்களுக்கு இந்த "பயர்" வீடியோ, படத்திற்கே "பேக் பயர்" ஆகிவிடுமோ என சிம்பு ரசிகர்களும் அச்சமடைந்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…