கை கால் விழுந்திடுச்சி : உதவி கேட்கும் நடிகர் வெங்கல் ராவ்
ஜூன் 25, 2024
Advertisement
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கல் ராவ். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு படங்களில் சண்டை கலைஞராக பணியாற்றி வந்தார். பின்னர் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்தி உள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலு உடன் இணைந்து 30 படங்களில் காமெடியில் அசத்தி உள்ளார். அதிலும் இவர்களது கூட்டணியில் வந்த தலைநகரம், எலி போன்ற படங்களின் காமெடி ரசிகர்களிடம் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதிலும் வெங்கல் ராவ்வின் தலையில் கை வைத்து மாட்டிக் கொண்டு வடிவேலு படும் அவஸ்ததை காமெடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
கடந்த 2022ல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார் வெங்கல் ராவ். சினிமாவிலும் வாய்ப்பு இன்றி போக இப்போது அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். உடல்நிலையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டதில் அவருக்கு கை, கால்கள் வரவில்லை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
‛‛அனைவருக்கும் வணக்கம். நான் வெங்கல் ராவ் பேசுறேன். எனக்கு கை, கால்கள் விழுந்திடுச்சு. என்னால் நடக்கவும் முடியல, சரியாக பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்கு பணமும் இல்லை. மருந்து வாங்க கூட காசு இல்லை. நடிகர்கள், சினிமா சங்கங்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்க. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை"" என உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!