
என் கஷ்டங்களை தானாகவே புரிந்து கொண்டு ஆறுதல் சொல்பவர் துல்கர் சல்மான் ; அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த சில நாட்களாகவே தனது காதல் பிரேக்-அப் குறித்த விவரங்களை வெளியிட்டு, தற்போது தான் சுதந்திரமாக இருப்பதாகவும் வெளிப்படுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாகவும், சில பேட்டிகள் மூலமாகவும் தான் சொல்ல விரும்பும் விஷயங்களையும் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தான் கடினமான சூழல்களைச் சந்தித்த சமயத்தில் நடிகர் துல்கர் சல்மான் தனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பது குறித்து சமீபத்தில் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
இது குறித்து அனுபமா கூறும்போது, "நான் மனரீதியாக சோர்வாகவோ அல்லது கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு துல்கர் சல்மான் எனக்கு மெசேஜ் செய்து நலம் விசாரிப்பார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் நான் முழுமையாக நம்பி பேசக்கூடிய நபர்களில் ஒருவர்தான் துல்கர் சல்மான். அவருடன் சிறிது நேரம் பேசினாலே எனது மனம் அமைதியாகிவிடும்" என்று கூறியுள்ளார். கடந்த 2017ல் வெளியான "ஜோமோன்டே சுவிசேஷங்கள்" படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!