
ரஜினியின் 51 வருட திரைப்பயணம் : கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழுவினர்
தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "தர்மன்" படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த 51 வருடத் திரைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, தர்மன் படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி ரஜினிகாந்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோரும் பங்கேற்றனர். "51 ஆண்டுகள், ஒரே பெயர், ஒரே சூப்பர் ஸ்டார், தர்மன் படப்பிடிப்புத் தளத்திலிருந்து கொண்டாடுகிறோம்" என இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழுவினர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!