
திரிஷ்யம் 3 ரிலீஸில் மாற்றம் : மோகன்லால் பிறந்தநாளில் வெளியாகிறது
திரிஷ்யம் 3ம் பாகத்தின் மலையாள பதிப்பு முதலில் வருகின்ற ஏப்ரல் 2ந் தேதியன்று திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், ஐக்கிய அரபு நாடுகளில் போர் சூழல் நிலவியுள்ளதால் மலையாள சினிமாவிற்கு முக்கியமான மார்க்கெட் ஐக்கிய அரபு நாடுகள் தான், இதனால் ஏப்ரல் 2ம் தேதியன்று திர்ஷ்யம் 3 படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரவில்லை என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இப்படம் வருகின்ற மே 21ம் தேதியன்று மோகன்லாலின் 66வது பிறந்தநாளில் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!