
டபுள் பிளாக்பஸ்டர் ஆன திரிஷ்யம் 3
மே 27, 2026
Advertisement
மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் "திரிஷ்யம் 3". இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் படம் சிறப்பான வசூலைப் பெற்று வருகிறது.
தற்போது வரையில் சுமார் 170 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் உலக அளவிலான வியாபாரம் சுமார் 30 கோடி. ஆனால், படம் 170 கோடி வசூலித்துள்ளதால் அதன் பங்குத் தொகை மட்டுமே 75 கோடி கிடைத்துள்ளதாம். படத்தின் வியாபாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வரையில் 45 கோடி லாபம் கிடைத்துள்ளது என்கிறார்கள்.
கேரளாவில் மட்டும் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. கேரளாவை விடவும் வெளிநாடுகளில் 90 கோடி வசூல் கிடைத்துள்ளதுதான் ஆச்சரியப்பட வைத்துள்ளது. எப்படியும் 200 கோடி வசூலை இப்படம் கடந்துவிடும் என்பதுதான் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!