
சீன மொழியில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம் 2 : கிளைமாக்ஸ் மாற்றம்
இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் இந்தியாவை தாண்டி கொரியன், மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் சீன ரீமேக்கில் த்ரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது. சீன தணிக்கை சட்ட விதிகளின்படி ஒரு பிரஜை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பது போன்று காட்சிகள் இருக்க கூடாது என்பதால் போலீசிடமிருந்து தப்பிக்கும் ஹீரோ. பின்பு தானே குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைக்கு செல்வது போன்று மாற்றப்பட்டது.
தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகமும் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய சாம் குவா இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதிலும் மோகன்லால் தண்டனையில் இருந்து தப்புவது மாதிரியான கதை தான். இந்த கதையிலும் அவர் சிறை தண்டனை பெறுவது போன்று கதையிலும், காட்சியிலும் மாற்றங்கள் இருக்கும் என்ற தெரிகிறது.
சீன த்ரிஷ்யத்தில் முதல் பாகத்தில் ஹீரோ சிறைக்கு சென்று விடுவதால் இரண்டாம் பாகத்தில் அவர் நன்னடத்தை காரணமாக சில ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டு தன் குடும்பத்தினரோடு சேர்வது போலவும், அப்போது அவர்களுக்கு வேறு பிரச்சினைகள் ஏற்படுவது போன்றும் கதையில் மாற்றம் இருக்கலாம். என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!