இடைவேளைக்குப் பின், முன் என தடுமாறும் இயக்குனர்கள்
ஜூலை 15, 2023
Advertisement
தமிழ் சினிமா எத்தனையோ விசித்திரமான படங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், இப்போது விசித்திரமான கமெண்ட்டுகளைத்தான் அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படியான கமெண்ட்டுகளுக்கு அடித்தளமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அந்த கமெண்ட்டுகள் புதிதாக வரும் படங்களைப் பற்றித்தான் அதிகம் இருக்கிறது.
ஒரு புதிய படம் வெளிவந்ததும், படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், இடைவேளைக்குப் பின் மோசமாக இருக்கிறது, மொக்கையாக இருக்கிறது. ஆனால், இடைவேளைக்கு முன் கலகலப்பாக நன்றாக இருக்கிறது என "பின், முன்" என பிரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக படம் நன்றாக இருக்கிறது என்ற கமெண்ட்டுகளை அபூர்வமாகத்தான் கேட்க முடிகிறது.
நேற்று வெளியான "மாவீரன்" படம் பற்றி வரும் விமர்சனங்களும், ரசிகர்கள் கருத்துக்களும் இதையேதான் எதிரொலிக்கின்றன. இடைவேளை வரை சுவாரசியமாக இருக்கிறது, இடைவேளைக்குப் பின் சரியாக இல்லை, படம் எப்போது முடியும் என யோசிக்க வைக்கிறது என்ற கமெண்ட்டுகள்தான் அதிகம் வருகின்றன.
ஆனால், மூத்த இயக்குனர்களைக் கேட்டால் இடைவேளை வரை ரசிகர்களை அப்படி, இப்படி என ஏதாவது செய்து உட்கார வைத்துவிட்டு, இடைவேளைக்குப் பின் அழுத்தமான கதையைச் சொன்னால் போதும், அந்தப் படம் ஹிட் என்கிறார்கள். இருந்தாலும் இன்றைய இளம் இயக்குனர்கள், இடைவேளைக்குள் ஏதாவது செய்துவிட்டு, இடைவேளைக்குப் பின் திணற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கமெண்ட் கருத்து சொல்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!