
துருவ நட்சத்திரம் - 3 வருட இடைவெளிக்குப் பிறகு 2வது பாடல்
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் "துருவ நட்சத்திரம்" படம் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான "ஒரு மனம்" பாடல் கடந்த 2020ம் வருடம் அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியானது. சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது பாடல் வெளியாகப் போகிறது. அதன் அறிவிப்புப் போஸ்டரில் "ஹிஸ் நேம் இஸ் ஜான்" என்று மட்டும் இடம் பெற்றுள்ளது. படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!