இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம்
செப் 26, 2023
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "கலக்க போவது யாரு" சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிரபலமானவர் விக்னேஷ் கார்த்திக். இதை தொடர்ந்து கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு பல சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
"பகல் நிலவு" என்ற தொடரில் நடித்தார். அதன் பிறகு திரைப்பட நடிகரான விக்னேஷ் கார்த்திக் "நட்பதிகாரம் 79, சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன, போன்ற படங்களில் நடித்தார். பின்னர் 2018ம் ஆண்டு வெளியான "ஏன்டா தலையில எண்ண வெக்கல" படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இதை தொடந்து, திட்டம் இரண்டு படத்தை இயக்கினார். கடைசியாக "அடியே" படத்தை இயக்கினார். அது நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று முன்தினம் விக்னேஷ் கார்த்திக்கின் திருமணம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த படங்கள் வெளியாகி உள்ளது. மணமகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!