
இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்
ஜூலை 17, 2025
Advertisement
1980ல் வெளிவந்த "இவர்கள் வித்தியாசமானவர்கள்" படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் வேலு பிரபாகரன். அடுத்து 1989ல் "நாளைய மனிதன்" படம் மூலம் இயக்குனராக கால் பதித்தார். அந்த படம் ஹிட் ஆனதால் அதன் இரண்டாவது பாகமாக 1990ல் "அதிசய மனிதன்" என்ற படத்தை இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கினார்.
பின்னர் ஆர்.கே.செல்வமணி தயாரித்த "அசுரன், ராஜாகிளி" படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் தோல்வியடைந்தது. அருண் பாண்டியனை வைத்து கடவுள், நெப்போலியன் நடித்த சிவன், சத்யராஜின் புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய அவர் தோல்வியையே சந்தித்தார்.
அடுத்த ரவுண்டாக நடிப்பில் கவனம் செலுத்திய வேலு பிரபாகரன், "பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா" போன்ற படங்களில் நடித்தார். 2009ல் "காதல் கதை" என்ற படம் மூலம் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பிய அவர், 2017ல் "ஒரு இயக்குனரின் காதல் டைரி" படத்தையும் எடுத்தார்.
பி ஜெயாதேவி என்பவரை முதன்முதலில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் கடந்த 2017ல் ஆண்டு தன் 60வது வயதில் தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். வேலு பிரபாகரன். நடிகை ஷிர்லே தாஸ், வேலு பிரபாகரன் உடன் "காதல் கதை" என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது மலர்ந்த காதலை அடுத்து 60வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இது அப்போது பேசுபொருள் ஆனது.
கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக செய்தி வெளியான நிலையில் அவரது குடும்பத்தார் மறுத்தனர். தொடர்ந்து கவலைக்கிடமான சூழலில் சிகிச்சை பெறுகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!