கர்ணன் - திரௌபதி முத்தம்... பாடல் குறித்து இயக்குனர் மோகன் கருத்து
மார் 10, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காணாமல் போயிருந்த சாதிய படங்கள் பா.ரஞ்சித் இயக்குனராக வந்த பிறகு மீண்டும் மறைமுகமாக தலைதூக்க ஆரம்பித்தது. அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அப்படியான காட்சிகள், வசனங்களைப் பார்க்கலாம்.
அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் "திரௌபதி" என்ற படத்தை இயக்குனர் மோகன் வெளியிட்டு அவரும் சினிமாவில் சாதிய மோதலை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "கர்ணன்" படத்திலிருந்து "திரௌபதி முத்தம்" என்ற பாடலை நாளை(மார்ச் 11) வெளியிட உள்ளதாக அறிவித்தார்கள். அதற்கு பல ரசிகர்கள் டுவிட்டர் தளத்தில் "திரௌபதி" பட இயக்குனர் மோகனை டேக் செய்து விமர்சித்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக மோகன் டுவிட்டரில், அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்..” என கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைத்தளத்தில் மோகன் டுவிட்டர் கணக்கில் கமெண்ட்டுகள் என்ற பெயரில் சாதிய மோதல் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!