
திருமண நாளைக் கொண்டாடும் ஆர்யா, சாயிஷா
அப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே 2019ம் வருடம் மார்ச் மாதம் 10ம் தேதி இருவரும் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இன்று இருவரும் தங்களது மூன்றாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் சாயிஷா நடித்து வருகிறார். அவரும் ஆர்யாவும் சேர்ந்து நடித்துள்ளள "டெடி" படம் நாளை மறுநாள் ஓடிடி தளத்தில் வருகிறது. சாயிஷா கன்னடத்தில் நடித்துள்ள "யுவரத்னா" படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு, “எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆக்குவதற்கு நன்றி, இனிய திருமண நாள் வாழ்த்துகள் மனைவியே,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஆர்யா. அதற்கு பதிலளித்துள்ள சாயிஷா, “உங்களை இப்போதும் எப்போதும் நேசிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
"கஜினிகாந்த்" படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆர்யா, சாயிஷா இருவரும் முதன் முதலாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!