இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா - நலமுடன் வீடு திரும்பினார்
ஜன 31, 2022
Advertisement
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா(79). இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர், இப்போது படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுப்பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் பாடலாசிரியர் வைரமுத்து இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
வைரமுத்து கூறுகையில், ‛‛நோய் என்பது உடல் தேடிக்கொள்ளும் ஓய்வு. எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் உடம்பின் தந்திரம். மனநிலை உடல்நிலை இரண்டுக்கும் சமநிலை காணும் இயற்கையின் ஏற்பாடு. கொரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ, இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம் பெறவும் வலம் வரவும் வாழ்த்துகிறேன்"" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜா போன் மூலம் பாரதிராஜாவிடம் உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார்.
வீடு திரும்பிய பாரதிராஜா
தன் உடல்நலம் குறித்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை : கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர் நடேசனின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று(டிச., 31) இல்லம் திரும்பிவிட்டேன். நடேசன், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை பற்றி நலம் விசாரித்த நண்பர்கள், திரைத்துறையினர், அரசியல் பெருமக்கள், உறவுகள் ஆகியோருக்கும் நன்றி. பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்கள் அணிந்து பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!