இயக்குனர் விஜய் வீட்டில் நிகழ்ந்த சோகம்
ஜூலை 17, 2022
Advertisement
அஜித் நடித்த ‛கிரீடம்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இவர் தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கினார். நடிகை அமலாபாலை திருமணம் செய்து, பின்னர் அவரை விட்டு பிரிந்து விவாகரத்தும் செய்து கொண்டார். அதன் பின்னர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை மணந்தார்.
இந்நிலையில் இயக்குனர் விஜய்யின் தாயாரும், அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று(ஜூலை 17) காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். விஜய்யின் சகோதரரான உதயாவும் தமிழில் ‛‛திருநெல்வேலி, தலைவா, ஆவி குமார், உத்தரவு மகாராஜா"" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் ஆறுதல் கூறி உள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!