
விடாமுயற்சி அப்டேட் நாளை இரவு 7.03 மணிக்கு….
இந்த வருடத்தின் அடுத்த ஆறு மாதங்களில் வெளிவர உள்ள பல படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்புகள் வந்துவிட்டது. விக்ரம் நடித்துள்ள "தங்கலான்", அஜித் நடிக்கும் "விடாமுயற்சி" ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்புதான் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் "விடாமுயற்சி" பற்றிய அறிவிப்பு நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் தளத்தில் "நாளை ஞாயிறு இரவு 7.03 மணிக்கு" என லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை "டேக்" செய்து பதிவிட்டுள்ளார். அதனால், அது "விடாமுயற்சி" அப்டேட்டாக மட்டுமே இருக்க வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!