
பேசமுடியவில்லை… ரஜினியின் பாராட்டுக்கு கல்கி 2898 ஏடி இயக்குனர் நன்றி
திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “கல்கி பார்த்தேன், வாவ்… என்ன ஒரு காவியம். இயக்குனர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை மாறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேன்,” என்று படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஷ்வின், “சார், பேச முடியவில்லை, எங்களது குழுவினர் உட்பட அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!