
மாஸ்டர் 300 கோடி வசூலா? -தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ
இப்படித்தான் முன்பு பிகில் படம் வெளியானபோதும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வசூல் செய்தியை வெளியிட்டு அந்நிறுவனத்தை ஐடி ரெய்டில் சிக்க வைத்தார்கள். அதேபோன்று தான் இப்போது மாஸ்டர் படத்தின் வசூலையும் தாறுமாறாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என ஒரு பக்கம் விமர்சனமும் வருகிறது
இப்படியான நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அப்பட வசூல் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ""200 கோடி, 300 கோடி வசூல் என்று சொல்வதை என்னவென்றே புரியாமல் ரசிகர்கள் பரபரப்பாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எல்லாம் படத்தை விற்கப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு மேல் பணம் வந்தால் தான் அது லாபம் ஆகும் என்று கூறியுள்ள சேவியர் பிரிட்டோ, 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு இவ்வளவு வசூல் வந்தது எதிர்பாராத ஒன்று தான். அந்த வகையில், வைரஸ் தொற்று நேரத்தில் இந்த அளவுக்கு மாஸ்டர் வசூலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை"" என்றும் தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!