
மாற்றம் தேவையில்லை என அஜித் கூறினாரா... அவர் தரப்பு விளக்கம்
அதேப்போல் திரைப்பிரபலங்களும் காலை முதலே ஆர்வமாய் ஓட்டளித்து வருகின்றனர். நடிகர் அஜித் காலையில் முதல் ஆளாய் திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். ஓட்டளித்த பின் மாற்றம் தேவையில்லை என அஜித் கூறியதவாக செய்தி பரவியது. இதுதொடர்பாக ஓட்டளித்த முதல்வர் ஸ்டாலினிடம் கூட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‛நல்ல கருத்து தானே சொல்லியிருக்கிறார், நல்லது தான்" என பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அஜித் தரப்பில் கூறியதாவது, ‛‛மாற்றம் தேவையில்லை என ஓட்டு பதிவு செய்ய வந்த நடிகர் அஜித் கூறவில்லை. தவறான தகவல்களை பரப்புகின்றனர். அஜித் எதுவுமே பேசவில்லை"" என தெரிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்சினிமாக்காரன் ஒட்டு போட்டால் முதல் ஆளாக அங்கு சென்று நிற்கிறீர்கள். சினிமாக்காரன் போனால் அவன் பின்னாலே போகிறீர்கள். உங்களால் இளைஞர்கள்? இல்லை அவர்களால் நீங்கள்? யாரால் யார் தீவினை?
he is a gentleman.... ஒற்றை விரலை காட்டாமல் மொத்த விரல்களையும் காட்டுகிறார். ஒருபோதும் திமுக பக்கம் சாய மாட்டார்.. பழைய நிகழ்வுகளை பாருங்கள்
ஓட்டு உரிமை அவருடையது, அவர் வெள்ளை அணிந்துவந்து வந்திருக்கிறார், யார் ஆட்சிக்கு வந்தாலும் அன்பா, சமாதானமாக, நல்ல முறையில் ஆட்சி செய்யுங்க என்று சொல்கிறார்.