
துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்
செப் 22, 2023
Advertisement
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் உருவான திரைப்படம் "துருவ நட்சத்திரம்". பல காரணங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இதில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ் கிருஷ்ணன், சிம்ரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபகாலமாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கு சென்சாரில் " யு/ஏ" சான்றிதழ் அளித்துள்ளனர் மேலும், நாளை (23.09.23) இதன் முக்கிய அப்டேட் வெளியிடுவதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனேகமாக படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட்டாக இருக்கலாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!