
இரு வாரங்களில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு: கவுதம் மேனன் நம்பிக்கை
பிப் 01, 2026
Advertisement
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் "துருவ நட்சத்திரம்". இப்படம் முடிவடைந்து 2017ம் ஆண்டே வெளியாகும் என்று அறிவிப்புகள் வந்தது. ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை. அதன்பின் பல முறை பட வெளியீடு பற்றி அறிவிப்பு வரும், ஆனால் படம் வராது. இந்த ஆண்டாவது படம் வெளியாகுமா என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் "துருவ நட்சத்திரம்" பட வெளியீடு பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ""துருவ நட்சத்திரம் படத்தை முதலில் சூர்யாவை வைத்து துவங்கினேன். பின்பு விக்ரமை வைத்து இயக்கி முடித்தேன். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக "துருவ நட்சத்திரம்" இருக்கிறது. பைனான்ஸ் சிக்கலால் இப்படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்ய இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது. இறுதிகட்ட பிரச்னைகளை சரிசெய்து வருகிறேன். இன்னும் இரண்டே வாரங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நம்புகிறேன். இந்த படத்தை வெளியிடுவதற்காக புதிய படங்கள் எதையும் இயக்காமல் இருக்கிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பும், சப்போர்ட்டுமே எனக்கு உந்துதல்"" எனக் கூறினார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!