
துருவ் விக்ரமின் நான்காவது படம் பூஜையுடன் தொடங்கியது!
"ஆதித்ய வர்மா, மகான்" படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த "பைசன்" படம் அவருக்கு முதல் வெற்றியாக அமைந்தது. 30 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 75 கோடி வசூலித்தது. இந்த படத்தில் அவருடன் பசுபதி, அமீர், அனுபமா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக செய்திகள் வெளியான போதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் பைசன் படம் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு அவர் நடிக்கும் நான்காவது படம் இன்று முதல் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. கமர்சியல் கதையில் உருவாகும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியிட பட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!