மூன்று கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ் 51வது படக்குழு
பிப் 14, 2024
Advertisement
தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்த படம் தற்காலிகமாக "DNS" என அழைக்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக ஐதராபாத்தில் தொடங்கி பின்பு திருப்பதியில் நடைபெற்றது. மூன்றாம்கட்ட படப்பிடிப்பு கோவாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. இதில் தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது கோவாவில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கும் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…