சித்தார்த் குரலில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல்
பிப் 14, 2024
Advertisement
ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "ஏழு கடல் ஏழு மலை". இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் "மறுபடியும் நீ" என்கிற முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது இந்த பாடல் நடிகர் சித்தார்த் குரலில் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளனர். சித்தார்த் ஒரு சில நிகழ்ச்சிகளில் சில பாடல்களைக் பாடியுள்ளார். இது அல்லாமல் ஏற்கனவே ராமின் இயக்கத்தில் வெளிவந்த "தரமணி" படத்தில் "உன் பதில் வேண்டி" என்கிற பாடலை சித்தார்த் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!