நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ் - தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி
அக் 31, 2023
Advertisement
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீ பிரசாத். சென்னையில் அவர் வசித்தாலும் அதிகமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்ததில்லை. வருடத்திற்கு ஓரிரு தமிழ்ப் படங்களுக்குத்தான் இசையமைக்கிறார்.
தற்போது தமிழில் சூர்யா நடிக்கும் "கங்குவா" படத்திற்கும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து தனுஷின் 51வது படத்திற்கு இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தனுஷ் நடித்து 2011ல் வெளிவந்த "வேங்கை" படத்திற்கு இசையமைத்திருந்தார் தேவிஸ்ரீ பிரசாத். சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அவருடன் மீண்டும் இணைய உள்ளார். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…