
அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படங்கள்
செப் 29, 2021
Advertisement
தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியானதை அடுத்து அடுத்தபடியாக அவர் நடித்துள்ள அட்ரங்கி ரே படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுசுடன் அக்சய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடித்துள்ளனர். இதேபோல் ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள கிரேமேன் என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!