
ஜெய் இசையில் குத்து பாட்டு பாடிய தேவா
ஜூன் 16, 2022
Advertisement
பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாகவும், ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் பட்டாம்பூச்சி. ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, மானஸ்வி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சைக்கோ திரில்லர் கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. இதில் வில்லனாக நடித்திருக்கும் ஜெய்யே இசையும் அமைத்துள்ளார். இந்த படம் வருகிற 24-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் வேட்டைகள் ஆரம்பம் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி உள்ள நிலையில், தற்போது ஜெயில் குத்துப்பாட்டு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் தேவா பாடி உள்ளார். இப்பாடல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!