
ஓடிடி, சாட்டிலைட் உரிமையில் புதிய சாதனை படைத்த ராமாயணா
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள ஹிந்திப் படம் "ராமாயணா". இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் இந்த வருட தீபாவளிக்கும், அடுத்த இரண்டாம் பாகம் அடுத்த வருட தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.
இரண்டு பாகங்களையும் சேர்த்து இப்படத்திற்கான பட்ஜெட் சுமார் 4000 கோடி என்று தகவல் வெளியானது. தற்போது இப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவை சுமார் 450 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தியத் திரையுலகத்தில் ஒரு படத்திற்காக வழங்கப்படும் அதிக தொகை இது. இதற்கு முன்பு தெலுங்குப் படமான "கல்கி 2898 எடி" படம் 375 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் இருக்கிறது.
ஓடிடியில் முதலில் பணம் செலுத்தி பார்க்கும் முறையில்தான் படம் வெளியாகுமாம். அதன் பிறகே சந்தாதாரர்கள் பார்க்கும்படி மாற்றுவார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!