தாமதமாகும் கேம் சேஞ்சர் ரிலீஸ் : இயக்குனர் ஷங்கர் பதில்
ஜூன் 27, 2024
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் "கேம் சேஞ்சர்". இப்படம் கடந்த 2021ம் வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமானது. கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு மிக மெதுவாக நடந்து வருகிறது.
இப்படத்தின் தலைப்பை கடந்த வருடம் மார்ச் மாதமே அறிவித்தார்கள். அதனால், கடந்த ஆண்டே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பட வெளியீடு எப்போது என்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கர், “படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. "இந்தியன் 2" படம் வெளியான பின் அந்த வேலைகளை முடித்துவிடுவேன். அதன் பின் "கேம் சேஞ்சர்" படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இறங்கி படத்தின் மொத்த காட்சிகள் பற்றி முடிவெடுப்பேன். அவை முடிந்த பின் பட வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகும். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!