தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம்
டிச 08, 2023
Advertisement
தமிழில் "மூனே மூணு வார்த்தை, கவண்" போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷனா ராஜேந்திரன். தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேப்போல் கனா, துணிவு போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷன்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் "பூக்குழி" நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது. "சேத்துமான்" படத்தை இயக்கிய தமிழ், இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் தமிழ் கூறும்போது, “ பெருமாள் முருகனின் இந்த நாவல் என்னைப் பாதித்ததால் படமாக்க முடிவு செய்தேன். தர்மபுரி பகுதியில் நடந்து வரும் சாதிய அரசியல்தான் கதைக்களம். நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்காக சில மாறுதல்களை செய்திருக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இயல்பான நடிகை ஒருவர் தேவைப்பட்டார் அதற்காகவே தர்ஷனா ராஜேந்திரனை தேர்வு செய்தோம்" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!