
மகனின் படத்திற்கு அப்பா பேச, அப்பாவின் படத்திற்கு மகன் பேச… வித்தியாச வீடியோ
அப்பா மம்முட்டி தமிழில் நடித்த "ஓம்", மகன் துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த "ஆகாசம்லோ ஒக தாரா" ஆகிய இரண்டு படங்கள்தான் அந்த வெவ்வேறு மொழிப் படங்கள்.
அப்பா மம்முட்டியும், மகன் துல்கர் சல்மானும் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே உண்டு. ஆனால், நேற்று இருவரும் இணைந்து அவர்களது படங்களுக்காக வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
மகன் துல்கர் சல்மானின் தெலுங்கு படத்திற்குகாக அப்பா மம்முட்டி தெலுங்கில் பேச, அப்பா மம்முட்டியின் தமிழ்ப் படத்திற்கு துல்கர் தமிழில் பேச, அந்த வீடியோவை இருவரும் பகிர்ந்துள்ளனர்.
அப்பா மகனின் இந்த வித்தியாச வீடியோ படத்திற்கு சிறப்பான விளம்பரமாக அமைந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…