
அருள்நிதியின் டி-பிளாக் பட ரிலீஸ் தேதி வெளியானது
மே 20, 2022
Advertisement
விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‛டி-பிளாக்". அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் குமார், உமா ரியாஸ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். கல்லூரி மாணவராக அருள்நிதி நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 1ம் தேதி டி பிளாக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!