இறுதி கட்டத்தில் கஸ்டடி
மார் 15, 2023
வெங்கட்பிரபு இயக்கி வரும் நேரடி தெலுங்கு படம் "கஸ்டடி". இந்த படம் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ப்ரியாமணி , அரவிந்த் சாமி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் என்னாகும் என்பதுதான் கஸ்டடி படத்தின் ஒருவரிக்கதை என்கிறார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடக்கின்றன. இறுதிகட்டத்தை அடைந்துள்ள படத்தின் டீசர் நாளை வெளிவருகிறது. படம் வருகிற மே மாதம் 12ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!