2 முறை உணவில் கரப்பான்பூச்சி : நிவேதா பெத்துராஜ் புகார்
ஜூன் 24, 2021
Advertisement
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தெலுங்கிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்திலும் நிவேதா பெத்துராஜ் தீவிரமாக இயங்கி வருகிறார். அதில் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. அதில், சுவிக்கி ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா பெத்துராஜ் இணைத்துள்ளார்.
இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது, சுவிக்கி உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் உணவகங்கள் என்ன தரத்தை தற்போது பின்பற்றுகின்றன என தெரியவில்லை. இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன். இத்தகைய உணவகங்களில் தினமும் சோதனை நடத்தி , தரமாக இல்லையென்றால் அதிக அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவது அந்த நிறுவனம் உணவு டெலிவரி செய்துவரும் நிலையில், தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!