
விக்ரமின் கோப்ரா மே 26ல் ரிலீஸ்
ஏப் 17, 2022
Advertisement
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோப்ரா. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டிலேயே படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இப்படம் கொரோனா தொற்று காரணமாக தாமதமாகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார்கள். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் கோப்ரா படம் மே 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதோடு விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று(ஏப்., 17) இந்த படத்தின் 2வது பாடலான ஆதிராவை ஏப்., 22ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!