விமல் ஜோடியாக மீண்டும் நடிக்கும் சாயாதேவி
டிச 04, 2024
Advertisement
நடிகை சாயாதேவி. "கன்னி மாடம்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கழுவேத்தி மூக்கன் படத்தில் நடித்தார். கடைசியாக "சார்" படத்தில் விமல் ஜோடியாக நடித்தார். தற்போது அவர் "பரமசிவன் பாத்திமா" என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, இயக்குகிறார். இவர் ஏற்கெனவே சேரன் நடித்த "தமிழ்க்குடிமகன்" படத்தை இயக்கி இருந்தார். இப்படத்த்தில் விமல், சாயாதேவி தவிர எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது “மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பாசாங்கின்றி சுவாரசியத்துடன் விவரிக்கும் படம்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!