பொங்கல் போட்டியில் இணைந்த சைந்தவ்
அக் 06, 2023
Advertisement
வருகிற ஜனவரி மாதம் வரும் பொங்கல் அன்று பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பல தமிழ் படங்கள் வெளிவருகிறது. அவற்றோடு பிற மொழிகளில் தயாராகும் பான் இந்தியா படங்களும் வெளியாகிறது. தற்போது வெங்கடேஷ் நடித்து வரும் பான் இந்தியா படமான "சைந்தவ்" பொங்கல் பண்டிகைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கடேஷின் 75வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கட் பொயனபள்ளி தயாரித்துள்ளார். வெங்கடேஷுடன் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை எஸ் மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!